கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பிரார்த்தனைகள் என்று அனைத்தையும் ஈடுகட்டி மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. ஏகப்பட்ட மன அழுத்தங்கள் இருந்தும் இவ்வளவு சிறப்பாக விளையாடியதை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
உலகில் நேற்று அதிக சந்தோசமாக இருந்து இருக்கும் ஒரு நபர் என்றால் அது நிச்சயம் சச்சினாகத் தான் இருக்கும். அணியினர் அனைவரும் ஒருவர் விடாமல் இந்த வெற்றி சச்சினுக்கு என்று கூறி அவரை பெருமைபடுத்தி விட்டார்கள். தன் மகன் மற்றும் மகளுடன் மிகுந்த சந்தோசமாக உலா வந்தார் .
உலகில் எதிரணியாக இருந்தாலும் நேசிக்கப்படுவர் சச்சின் ஒருவரே.
இந்தியாவில் உள்ள பெரிய மதம் இந்து மதமல்ல அதன் பெயர் “கிரிக்கெட்” அதன் கடவுள் சச்சின்
21 வருடமாக கிரிகெட்டை தன் தோளில் சுமந்து வந்தார் இப்போது நாங்கள் சச்சினை எங்கள் தோளில் சுமக்க வேண்டிய நேரம் – கோலி
போட்டி முடிந்து பேசியபோது இந்திய வீரர்கள் அனைவரும் இந்தக் கோப்பை இந்தியர்களுக்கு என்று சொல்லியது நெகிழ்வாக இருந்தது. விராட் கோலி சச்சின் பற்றிச் சொல்லும்போது இந்தியாவின் பாரம் அவர் தோளில் இருபது வருடமாக இருக்கிறது. அவரை நாங்கள் சுமப்பதில் பெருமை கொள்கிறோம் என்று சொன்னது மனதுக்கு கணமாக இருந்தது .
அண்மைசெய்தி :