.ஒரு தலைவன் இருக்கிறான்
எதேச்சையாக சேனலை மாற்றிக்கொண்டு வந்தபோது
ஈழத்தில் பச்சை குழந்தைகளும் தாய்மார்களும்,கொல்லப்பட்ட காட்சிகளை பார்த்துவிட்டு,என் தாய் குளத்து மீனில் செய்துதரும் மீன் குழம்பை
யும் உண்பதில்லை..மீன்களை பார்த்தால் மீனவன்தான் நினைவுக்கு வருகிறான்..ஈழமக்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் என கண்கலங்கினார்...இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் கண்கலங்கியது.
எனக்கு சுயமரியாதை முக்கியம்....அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தால் 10 பேர் தீக்குளிப்பேன் என என் கட்சி தொண்டர்கள் ஆவேசமாக தடுக்கிறார்கள்..அவர்கள் செய்யக்கூடியவர்கள்தான்....எனவே என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை..என்றார் வைகோ..
ஒரு தலைவன் இருக்கிறான்
ஒரு தலைவன் இருக்கிறான்
ஓட்டு பொறுக்கிகளுக்கு மத்தியில் ஒரு சீட்டுக்கு தலைவர் வாசலில் தவமிருக்கும் கட்சிகளுக்கு மத்தியில் தன் கட்சியே அழிந்தாலும்,பரவாயில்லை சுயமரியாதைதான் முக்கியம் என தேர்தலை புறக்கணித்த வைகோ என்னும் மாவீரனுக்கு என் சல்யூட்..
தினமலர் இணையதளத்தில் வைகோ தேர்தலை புறக்கணித்ததை கிண்டலாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்,இதற்கு என் கடுமையான கண்டனம்...