Pages

Monday, April 25, 2011

எப்படி சொல்வது...



எப்படி சொல்வது...






    

எல்லாவற்றையும்
சொல்லி விட முடிகின்றது..

சொந்தங்கள்
ஆசையாக கட்டிய வீடு
பிறந்த மண்

விவசாயம் பார்த்த வயல்கள்..
எங்க ஊரு கோவில்கள் ..
படித்த பள்ளி.. விளையாடிய மந்தை..
சேகரித்த புத்தகங்கள்
குமிழ் போட்ட கதவு

என
எல்லாமே வந்து போகும்
நடுநிசியில்
அயல் நாட்டுக்கு வந்து
அகதியாய்
தவிப்பதை எப்படி சொல்வது ?
"ஏப்பா.. இங்கே வந்தோம்"
என கேட்கும் மகனிடம் ......
.......

(புகைப்படம் என் கிராமத்தில்எடுத்தது)